1 post per page

Sunday, July 5, 2026

நாட்டாமை ……தீர்ப்பு , தடுமாற்றம்

 

நாட்டாமை

  ……தீர்ப்பு , தடுமாற்றம்     

,

நிச்சயிக்கப்பட்ட  திருமணத்திற்குப்  பிறகும் கூட ஜோடிகள் ஒருவரையொருவர்  காதலிக்க வாய்ப்புகள் உள்ளது  என்று சமீபத்தில் அறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது.. அனைத்து 18 பட்டி கட்ட பஞ்சாயத்துகளுக்கும் , நாட்டாமைகளுக்கும்   இது பெரும் அதிர்ச்சியாக அமைந்தது .   



     

2003 -ஆம்  ஆண்டில்  தங்கள்   வாழ்க்கைத் துணையின்  மரணத்திற்காகக்  கண்ணீர்  சிந்தியவர்களில்  951/2 சதவீத திருமணங்கள்  குடும்பத்தினரால்  நிச்சயிக்கப்பட்டிருந்தன  என்று அந்த அறிக்கை கூறியது . மேலும்  நிச்சயிக்கப்பட்ட  திருமணங்களிலும்  ஏதோ ஒரு வகையில் காதல் மலரத்தான்  செய்கிறது  என்றும்  கூட  அந்த அறிக்கை   தெரிவித்தது..

 “ நிச்சயிக்கப்பட்ட  திருமணங்கள்  மற்றும் காதல் திருமணம்  இரண்டிலுமே காதல்  மற்றும், திருமணம்   நிகழ்கின்றன  ஆனால்  அவற்றின்  வரிசை மட்டுமே  தலைகீழாக  உள்ளது’’  என கணக்கெடுப்பை  நடத்திய   நிறுவனம்  தெரிவித்துள்ளது .

 

துணைவரின்  மறைவின்போது  அழுவது  என்பது  ஒரு  வழக்கமெ   தவிர, அது  அன்பின் அல்லது  பாசத்தின்  அடையாளம்  அல்ல என்று வாதிடும்  பழமைவாத  நாட்டாமைகள்    இக்கருத்தை        தீய நோக்கம்    கொண்டதாகக்  கூறி  தீவிரமாக  நிராகரித்துள்ளனர்.

"காதல்  என்பது  முற்றிலும்  சட்டவிரோதமான  செயல்," என்று  எட்டையபுரம்   கட்ட பஞ்சாயத்தின்  பெரிய  நாட்டாமை  பசுபதி  பதிலளித்தார் . தன்னை ஒரு சமூக  நலப்பணி  ஊழியர் என்று கூறிக்கொண்ட அவர், "குடும்பத்தினரால் திருமணம் செய்து வைக்கப்படுவது  ஒரு வழக்கம்., நம் பண்பாடினபடி  பெண் ஒரு குடும்பத்தின்  நிரந்தர  சொத்து அல்ல, மேலும் ஒரு ஆணுக்கு குழந்தைகள்  தேவை.!. இதில்  காதல் கத்தரிக்காய்கெல்லாம் எங்கே  இடம்  இருக்கிறது? " என்றார்.

பக்கத்து கிராமத்து  இளைஞன் ஒருவனைக்  காதலித்ததற்காகத்  தன் சொந்த மாமன் மகளையே  கொன்ற அந்த நாட்டாமையை  மதிப்பும் பெருமையுடனும்தான்    கிராமத்து   மக்கள  .    நடத்தி வந்தார்கள் . தன் மனைவியை  நேசிப்பது பற்றி அவரை  தகவல் சேகரிப்பாளர்  விசாரித்ததில்  “ நாம் இப்போது இந்த விஷயத்தைப் பற்றி விவாதிக்க வேண்டாம். இது ஏற்ற சந்தர்ப்பம் அல்ல”. என்று அவர் கூறினார். 

         


செய்தியாளர்கள் குழு ஒன்று தன்னை நோக்கி வருவதைக் கண்டதும் அவர் குடிநீருக்கான பித்தளை சொம்பு , வெற்றிலை-பாக்கு பெட்டியை  சுமந்து படியே அங்கிருந்து சாமர்த்தியமாக நகர்ந்து  சென்றார்.

 


No comments:

The Quiet Extinction ……..Silent Springs and Empty Canopies

  The Quiet Extinction      ……. . Silent Springs and Empty Canopies   When a former classmate returned to India after 40 long years, h...